திருவண்ணாமலை: மகேந்திரா ஓம் பைனான்ஸ் தனியார் வங்கி மீது புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை அருகே மகேந்திரா பைனான்ஸ் தனியார் நிறுவனத்தினர் முன்னறிவிப்பின்றி வீட்டை சீல் வைத்ததால் பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். சின்னியம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார், மற்றும் அவரது மனைவி பிரியா கடந்த 2019 ஆம் ஆண்டு மகேந்திரா பைனான்ஸ் என்ற தனியார் வங்கியில் இரண்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இவர்கள் கொரோனா காலத்தில் சரிவர கடனை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இருவரும் தற்போது, பெங்களூருவில் கூலி வேலை செய்து வரும் நிலையில் கடந்த வாரம் வங்கிக்கு சென்று பணத்தை விரைவில் கட்டிவிடுவதாக உறுதியளித்துள்ளனர். ஆனால் வங்கி ஊழியர்கள் முன்னறிவிப்பின்றி வீட்டை சீல் வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். 

varient
Night
Day