திண்டுக்கல்: முறையின்றி நடைபெற்ற பூ மார்க்கெட் கடைகள் ஏலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டு மூன்றாவது முறையாக நடைபெற்ற பூ மார்க்கெட் கடைகள் ஏலமும் முறையின்றி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. வெளிப்படை தன்மையுடன் திறந்தவெளியில் பொது ஏலம் நடத்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட நிலையில், பேரூராட்சி வளாகத்தில் உள்ள  மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு அடியில் உள்ள, குடோனில் ஏலம் நடைபெற்றது. பத்திரிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அனுமதிக்காமல் ரகசியமாக சின்டிகேட் அமைத்து ஏலம் நடத்தப்பட்டதாக கூறி வியாபாரிகள், விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

varient
Night
Day