தங்கம் விலை தொடர் சரிவு - சவரன் ரூ.160 குறைந்து ரூ.53,040-க்கு விற்பனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த சில நாட்களாக தங்கம் விலை இறங்கு முகத்தில் உள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 630 ரூபாய்க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 53 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி 20 காசுகள் அதிகரித்து 96 ரூபாய் 20 காசுகளுக்கும், கிலோவுக்கு 200 ரூபாய் அதிகரித்து 96 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Night
Day