சென்னை மெட்ரோ ரயில் பணி - போக்குவரத்து மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மெட்ரோ ரயில் பணி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஒயிட்ஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடைபெற உள்ளது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்று முதல் ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒயிட்ஸ் சாலையில் இருந்து திரு.வி.க சந்திப்பு வரை வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், அண்ணாசாலையில் இருந்து ஸ்மித் சாலையில் வரும் வாகனங்கள், ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

Night
Day