தமிழகம்
சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.400 சரிவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1 லட?...
சாதி மத மற்றவர் என்ற சான்றிதழை வழங்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், சாதி மத மற்றவர் என்ற சான்றிதழை வழங்கக் கோரி வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தும் நடவடிக்கை எடுக்காததால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், இதுபோன்று சான்றிதழ் வழங்கினால் நடைமுறை சிக்கல் ஏற்படும் என்று தெரிவித்தார். மேலும், பட்டியலில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை வழங்க மட்டுமே வருவாய்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இருப்பதால், சாதி மத மற்றவர் என்ற சான்றிதழை வழங்க உத்தரவிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1 லட?...
பருத்திவீரன் திரைப்படத்தில் பாடிய கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் உடல்நல க...