கோயம்பேடு ஆம்னி பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனிடையே ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதின்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், சென்னை கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகளை ஏற்றி, இறக்கலாம் என அனுமதி வழங்கியது. கோயம்பேடு மட்டுமல்லாமல் போரூர், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், பயணிகளை ஏற்றி, இறக்காமல் செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இணையவழி, கைப்பேசி செயலிகளில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகள் ஏற்றி இறக்க வேறு இடங்களை குறிப்பிடக்கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் சங்கத் தலைவர் அன்பழகன், சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக தெரிவித்தார். 

Night
Day