எழுத்தின் அளவு: அ+ அ- அ
15வது குடியரசுத் துணைத் தலைவராக தேர்வாகி உள்ள திரு. சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய அரசியலமைப்பில் 2-வது உயரிய பதவியான குடியரசு துணைத் தலைவராக தேர்வாகி உள்ள மாண்புமிகு திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மண்ணை சேர்ந்த நம்மில் ஒருவரான திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்த உயர்ந்த பதவியை அலங்கரிப்பதில் தாம் மிகவும் பெருமிதம் அடைவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை சேர்ந்த திரு.ஆர்.வெங்கட்ராமன் அவர்களைத் தொடர்ந்து தற்போது திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் 15-ஆவது குடியரசு துணைத் தலைவராக வெற்றி பெற்று இருப்பதன் மூலம் தமிழ்நாட்டிற்கு ஒரு வரலாற்று சிறப்பை தேடித்தந்துள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில், தமிழ் மண்ணை சேர்ந்த நாம் ஒவ்வொருவரும் பெருமையடைகிறோம் எனவும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
அன்பு சகோதரர் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய தேசத்தின் மாபெரும் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் தங்களது தன்னலமற்ற சேவையினை ஆற்றிடவும், தங்களுடைய உன்னதமான பணிகள் மென்மேலும் சிறந்து விளங்கிடவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.