கழகத்தை தலைமையேற்று வழிநடத்திட வாருங்கள் - புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு தொண்டர்கள் அழைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, 'கழகத்தை தலைமையேற்று வழிநடத்திட வாருங்கள்' என அழைப்பு விடுத்து, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.

அஇஅதிமுக பிளவுபட்டு உள்ளதால், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிட்டது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான தொண்டர்கள், கழகத்தை தொடர் தோல்விலியிருந்து காப்பாற்றவும், கழகத்தை வழிநடத்தவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வரவேண்டுமென அழைப்பு விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகர், பட்டினம் காத்தான், சின்னக் கடை உள்ளிட்ட பகுதிகளில் பசும்பொன் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் சார்பில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு அழைப்பு விடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஒன்றிணைவோம் வென்று காட்டுவோம், கழகம் காக்க வாருங்கள் காவல் தெய்வமே என அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிற்கு தொண்டர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். 

Night
Day