கடற்கரை - தாம்பரம் இடையே 44 புறநகர் ரயில்கள் ரத்து : பேருந்துகளில் செல்ல அலைமோதிய மக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இருப்புப்பாதை பராமரிப்பு காரணமாக 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் இடையே இருப்புபாதை பராமரிப்பு பணி காரணமாக காலை 10.05 முதல் பிற்பகல் 2.30 மணிவரை 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்தது. இதனால் சென்னை கடற்கரை, தாம்பரம் செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்சார ரயில்கள் ஓடவில்லை. இதனையடுத்து தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்துகளில் செல்வதற்காக கூட்டம் அலைமோதியதால் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து தாம்பரம் காவல் உதவி ஆணையாளர் நெல்சன் தலைமையில் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

Night
Day