ஒகேனக்கல் ஆற்றில் இளைஞர் அடித்து செல்லப்பட்டு உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் தந்தையின் அஸ்தியை கரைக்க சென்ற இளைஞர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னப்ப நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரது தந்தை 3 நாட்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், தந்தையின் அஸ்தியை கரைக்க ஒகேனக்கல் காவிரியாற்றுக்கு உறவினர்களுடன் சென்றுள்ளனர். ஆலம்பாடி பரிசல் துறை பகுதியில் அஸ்தியை கரைக்க இறங்கியபோது, ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் 2 மணி நேரத்திற்கு பிறகு சந்தோஷ் குமாரை சடலமாக மீட்டனர். 

Night
Day