ஏ,ஆர்.முருகதாஸ் இயக்‍கத்தில் சல்மான்கான் - "அடுத்த ஆண்டு ரம்ஜானுக்‍கு சிக்‍கந்தர்"

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஏ.ஆர் முருகதாஸ் இயக்‍கத்தில் சிக்‍கந்தர் என்ற புதிய படத்தில் தாம் நடிக்‍க இருப்பதாக பாலிவுட் நடிகர் சல்மான்கான் தெரிவித்துள்ளார்.

ரம்ஜான் பண்டிகை நாளான இன்று இந்த அறிவிப்பை சல்மான்கான் வெளியிட்டுள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராமில் சல்மான்கான் வெளியிட்ட அறிவிப்பில் இந்த ரம்ஜான் பண்டிகை நாளில் படேமியான், சோடேமியான் மற்றும் 
மைதான் திரைப்படங்களை கண்டு ரசிக்‍குமாறும், அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை நாளில்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்‍கத்தில் தாம் நடிக்‍கும் சிக்‍கந்தர் திரைப்படத்தை தனது ரசிகர்கள் கண்டு ரசிக்‍கலாம் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பு சல்மான்கானின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

varient
Night
Day