எழுத்தின் அளவு: அ+ அ- அ
கலைத்துறையில் சிறந்த பங்களிப்பை செலுத்திய நடிகர் அஜித்குமார் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை குடியரசு தலைவர் இன்று வழங்குகிறார்.
நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்திற்கு முந்தைய நாள் இந்த விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின், நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி உள்ளிட்டவர்களுக்கு இன்று பத்ம விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ வழங்குகிறார். பத்மபூஷன் விருதை பெறுவதற்காக குடும்பத்துடன் நடிகர் அஜித்குமார் டெல்லி சென்றார்.