முதலீடு செய்தால் பங்கு - ரூ.20 கோடி மோசடி - டிராவல்ஸ் உரிமையாளர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், பங்கு தருவதாகக் கூறி 20 கோடி ரூபாய் மோசடி செய்து, தலைமறைவாக இருந்த உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். 

அய்யம்பேட்டை நந்தனம் பகுதியைச் சோ்ந்தவா் ஹக்கீம். இவா் தான் நடத்தி வந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் ஒரு லட்சம் ருபாய் முதலீடு செய்தால் மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய் பங்குத் தொகையாக வழங்கப்படும் என விளம்பரப்படுத்தினார். இதனை நம்பி பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சுமார் 20 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஹக்கிம் கூறிய படி பங்கு தொகையை வழங்காதததால் பாதிக்கப்பட்டோர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தனர். இதைத்தொடா்ந்து 2 வருடமாக தலைமறைவாக இருந்த ஹக்கீமை கோவையில் வைத்து போலீசார் கைது செய்தனா். தொடா்ந்து தலைமறைவாக உள்ள பாத்திமா என்பவரை தேடி வருகின்றனா்.

varient
Night
Day