பிரேசில்: 26அடி நீள அனகோண்டா பாம்பை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரேசிலின் அமேசான் மழை காடுகளில் 26 அடி நீளமான அனகோண்டா பாம்பை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். பாம்புகள் உலகம் என்றழைக்கப்படும் அமேசான் மழை காடுகளில் காட்டு விலங்குகள் ஆராய்ச்சியாளரான தொலைக்காட்சி புகழ் பேராசிரியர் ஃப்ரீக் வாங்க் இந்த 26 அடி நீள அனகோண்டா பாம்பை கண்டுபிடித்துள்ளார். சுமார் 200 கிலோ எடை கொண்ட அந்த பச்சை அனகோண்டா பாம்பு, கார் டயர் அளவுக்கு பருமனாக காணப்படுகிறது. கடலுக்கு கீழே நடமாடிய பாம்பை எவ்வித பயமும் இல்லாமல் ஆராய்ச்சியாளர் ஃப்ரீக் வாங்க் நெருங்கியது மெய்சிலிர்க்க வைப்பதாக உள்ளது. இந்த ஆராய்ச்சியில் ஃப்ரீக் வாங்குடன் சேர்ந்து உலகின் 14 நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த அனகோண்டா பாம்பு ஆய்வில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

varient
Night
Day