தைவானை சுற்றி வலம் வந்த சீனாவின் விமானம் மற்றும் கடற்படை கப்பல்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தைவானை சுற்றி வலம் வந்த சீனாவின் விமானம் மற்றும் கடற்படை கப்பல்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தைவான் நாட்டை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து தைவானை சுற்றி ராணுவ விமானம் மற்றும் கடற்படை கப்பல்களை அனுப்பி வருகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை 7 சீன ராணுவ விமானங்கள் மற்றும் 4 கடற்படை கப்பல்களை அனுப்பி, தைவான் ராணுவத்தின் செயல்பாட்டை கண்காணித்துள்ளது. இதனிடையே, கீலங் பகுதியின் வடமேற்கே 119 கிலோ மீட்டர் தொலைவில் சீன பலூன் ஒன்று கடந்து சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day