இஸ்ரேலுக்கு அணு ஆயுதங்கள் வழங்க மாட்டோம் - பிரான்ஸ் அதிபர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேலுக்கு அணு ஆயுதங்கள் வழங்க மாட்டோம் என பிரான்ஸ் அறிவித்துள்ள நிலையில் அதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதிலடி கொடுத்துள்ளார்.  

பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன்நோயல் பாரட் 4 நாள் அரசு முறை பயணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நாளை இஸ்ரேல் சென்று பயணத்தை முடிக்க உள்ளார். இதனிடையே, காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது என்றும் அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காண்பதற்காக  இஸ்ரேலுக்கு அணு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தியுள்ளதாக பிரான்ஸ்  அதிபர் இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். மேலும், போரை நிறுத்துவதற்கு மற்ற நாடுகளும் இதனை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பிரான்ஸ் அதிபர் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக யார் ஆதரவு இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இஸ்ரேல் வெற்றி பெறும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு  உறுதிபட தெரிவித்தார். 


varient
Night
Day