இஸ்ரேலின் நீண்ட கைக்கு எட்டாத அளவுக்கு ஈரானில் எவரும் ஒளிந்து விட முடியாது - நெதன்யாகு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொல்வதற்கான நடவடிக்கைக்கு, தான் தனிப்பட்ட முறையில் அனுமதி அளித்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் நீண்ட கைக்கு எட்டாத அளவுக்கு ஈரானிலும் அல்லது மத்திய கிழக்கிலும் எவரும் ஒளிந்து விட முடியாது எனக் கூறியுள்ள அவர் எங்களை யார் அடித்தாலும் அவர்களைத் திருப்பி அடிப்போம் என அயத்துல்லாவின் ஆட்சி எச்சரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். எதிரிகளைத் தொடர்ந்து தாக்கவும், பணயக்கைதிகள் அவர்களின் வீடுகளுக்குத் திரும்பவும், தொடர்ந்து உறுதியான செயல்களை முன்னெடுப்போம் என்றும் அவர் சூளுரைத்தார். 

varient
Night
Day