100-வது ராக்கெட்டை ஏவி இஸ்ரோ புதிய சாதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரோ தனது 100வது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15 ஐ வெற்றிகரமாக விண்ணில் ஏவி புதிய சாதனை படைத்துள்ளது. என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விண்ணில் பல சாதனைகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 100ஆவது ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி-எப்15 ஐ இன்று காலை 6.23 மணிக்கு விண்ணில் ஏவியது. இந்த ஜிஎஸ்எல்வி- எப்15 ராக்கெட், என்விஎஸ்-02 என்ற செயற்கைக்கோளை சுமந்து சென்ற நிலையில், அது வெற்றிகரமாக புவி சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜி.எஸ்.எல்.வி எப்-15 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் வழிகாட்டுதல் சேவையை வழங்க உள்ளது. என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் 2,250 கிலோ எடை கொண்ட நிலையில், இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்.

இந்நிலையில், போக்குவரத்து மேலாண்மை, விவசாயம் உள்ளிட்ட செயல்பாடுகளை என்.வி.எஸ்-02 செயற்கைக்கோள் மேற்கொள்ளும் என்றும், பேரிடர் காலங்களில் துல்லியமான தகவல்களை வழங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் புதிய தலைவராக சமீபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த வி.நாராயணன் பதவியேற்றப் பிறகு ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day