மகாராஷ்டிரா : குடோனில் சுத்தம் செய்து கொண்டிருந்த பெண் மீது விழுந்த அரிசி மூட்டைகள் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிராவில் குடோனில் சுத்தம் செய்து கொண்டிருந்த பெண் மீது அரிசி மூட்டைகள் விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. நவி மும்பை அருகே செயல்படும் கடை ஒன்றில், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென அவர் மீது 25 கிலோ எடை கொண்ட 40க்கும் மேற்பட்ட மூட்டைகள் விழுந்தன. இதன் அடியில் சிக்கி கொண்ட அப்பெண்ணை, ஊழியர்கள் விரைவாக செயல்பட்டு காப்பாற்றியதால் அவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.

Night
Day