பிரதமர் தலைமையில் பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜகவின் சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அடுத்த மாதம் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் 291 வேட்பாளர்களை நான்கு பட்டியல்களாக பாஜக அறிவித்தது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக பாஜகவின் மத்திய தேர்தல் கமிட்டியின் கூட்டம் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.  இதில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று ஆலோசித்தனர்.

varient
Night
Day