இந்தியா
டெல்லியில் காற்று மாசு... நாளை முதல் கட்டுப்பாடுகள் அமல்...
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாட...
திடீர் மாரடைப்பு மரணங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை என்றும், ஆனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து இரண்டு ஆய்வுகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக மக்களவையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. திடீர் மாரடைப்பு மரணங்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் மத்திய அரசிடம் உள்ளதா என மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் சத்தியபால் சிங் பாகில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் மாரடைப்பு இறப்பு குறித்தான புள்ளி விவரங்கள் இல்லை என்றும் அதே நேரத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான 2 ஆய்வுகளை ஐசிஎம்ஆர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை உதவிகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு காரணமாக மாநில அரசு பல்வேறு கட்டுப்பாட...
தஞ்சை மாவட்டம் திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரனின் கார் மோதியதி...