ஜார்கண்ட்: காங்கிரஸை சேர்ந்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் பா.ஜ.க.வில் ஐக்கியம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்கண்ட் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரான கீதா கோடா, பா.ஜ.க.வில் இணைந்தார். ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடாவின் மனைவியான கீதா கோடா, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்ததில் இருந்து அதிருப்தியில் இருந்து வந்தார். ஜார்கண்டின் சிங்பம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட கீதா கோடா, முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் ஜார்காண்ட் மாநில பா.ஜ.க. தலைவர் பாபுலால் மராண்டி முன்னிலையில் கீதா கோடா பா.ஜ.க.வில் இணைந்தார். 

Night
Day