இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும் - வாட்ஸ் ஆப் நிறுவனம் எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய அரசின் புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம் என வாட்ஸ் ஆப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் ஏராளமானோர் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் தகவல்களை பத்திரமாக வைத்து கொள்வதற்காக வாட்ஸ் ஆப் நிறுவனம் என்கிரிப்ஷன் என்ற பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்துகிறது. கடந்த 2021ம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் இந்திய அரசு மாற்றத்தை கொண்டு வந்த நிலையில், பேஸ்புக், வாட்ஸ் அப் நிறுவனங்கள் இந்த சட்டத்தை மீறியதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. இதனை எதிர்த்து இந்நிறுவனங்கள் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பு அம்சமான என்கிரிப்ஷனை உடைக்க கட்டாயப்படுத்தினால், இந்தியாவை விட்டு வெளியேறுவோம் என வாட்ஸ் ஆப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

varient
Night
Day