SDPI அலுவலகத்தில் ED சோதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மண்ணடி இப்ராஹிம் தெருவில் உள்ள SDPI கட்சியின் தலைமை அலுவலகத்தில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் தலைவர் எம்.கே.ஃபைஸியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3-ம் தேதி டெல்லியில் வைத்து கைது செய்தனர். அவர் மீது பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில் டெல்லி, சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள எஸ்டிபிஐ அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக சென்னை மண்ணடி இப்ராஹிம் தெருவில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. 20க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எஸ்டிபிஐ கட்சிக்கு பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெறப்பட்டுள்ளதாக கிடைத்த  தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

Night
Day