வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா

எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கதவுகளை போலீசார் மூடியதால் காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வழக்கறிஞர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர் வரதராஜன் என்பவரை அவரது கடையில் வேலை பார்த்த ஷேக் என்ற நபர் உள்ளிட்ட சிலர் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக புகார் அளிக்க வரதராஜன் சென்றபோது தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவாக வடமதுரை காவல் நிலையத்தில் அவரிடம் இரண்டு லட்சம் கேட்டதுடன் அவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனை கண்டித்து திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றபோது வழக்கறிஞர்களை உள்ளே நுழைய விடாமல் பிரதான கதவை போலீசார் மூடியதால் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வழக்கறிஞர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Night
Day