சென்னையில் நாளை காலை வரை மழை நீடிக்க வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மீண்டும் புயலாக வலுப்பெறுவதற்கான சூழல் இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

சென்னை கடற்கரையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கிட்டத்தட்ட நிலையாக உள்ளதாக ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது, அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்கு சென்னை கடற்கரையிலிருந்து அதே பகுதியில் நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேற்கு தாழ்வு மண்டலம் கூடுதல் ஈரப்பதத்தை வழங்கி வருவதால் டிட்வா புயல் வலுவிழப்பதற்கான சூழல் இல்லை என்றும் இது மீண்டும் புயலாக வலுப்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே காலை முதல் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இடைவிடாது மழை பெய்து வரும் நிலையில், தற்போது இவ்விரு மாவட்டங்களுக்கும் அதிக கன மழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதேபோன்று, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டிட்வா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னையை நெருங்கி வருவதால் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. தொடர்ந்து மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


Night
Day