ரோகிணி குழுமத்தின் நிறுவனர் இல்லத்திருமணம் - மணமக்களை வாழ்த்திய புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

ரோகிணி குழுமத்தின் நிறுவனர் ஆர்.பன்னீர்செல்வம் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கலந்து கொண்டு, மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 ரோகிணி குழுமத்தின் நிறுவனரும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான ஆர்.பன்னீர்செல்வம் இல்லத்திருமண வரவேற்பு விழா சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, மண்டபத்திற்கு வருகை தந்தபோது, திருமண வீட்டார், மேளதாளங்கள் முழங்க, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

இதனைத் தொடர்ந்து, மணமக்கள் P.ரேவண்த் சரண் மற்றும் D.பூஜா ஹரிணி  ஆகியோருக்கு, புரட்சித்தாய் சின்னம்மா பூங்கொத்துகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மணமக்கள் இருவரும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவிடம் ஆசி பெற்றனர். 

திருமண வீட்டார் மற்றும் விழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய்  சின்னம்மா உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு வாழ்த்து பெற்றனர்.Night
Day