பிரபல நகைக்கடையில் நள்ளிரவில் தீ விபத்து..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. ராசிபுரம் கடைவீதி பகுதியில் உள்ள பிரபல நகைகடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில், பணியாற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர், காலையில் வந்து பார்த்தபோது, கடையில் இருந்து கரும்புகையுடன் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்த நகை, ஏசி, சிசிடிவி, உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமானது தெரிய வந்தது. இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தினர். 

Night
Day