2026 சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக ஆட்சி அமையும் - புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில், அஇஅதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து, 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், ஒட்டுமொத்த அஇஅதிமுகவும் ஒரே அணியில் இருக்கும் என்றும், சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபட தெரிவித்துள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம் சீதாம்பாள்புரத்தில் நடைபெற்ற குழந்தைகள் காதணி விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த புரட்சித்தாய் சின்னம்மா, திமுகவினர் அரசு நிர்வாகத்தில் சிறிதும் கவனம் செலுத்தவில்லை என்றும் தேர்தல் ஒன்றே குறியாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார். 

Night
Day