திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள், சொந்த ஊர் திரும்ப ரயில் நிலையத்தில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. 


கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில், விடிய விடிய கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்தனர். ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி சென்ற ரயிலில் பயணிகள் ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு ஏறியதால் நெரிசல் ஏற்பட்டது.

Night
Day