தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து - இந்திய தேர்தல் ஆணையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தை சேர்ந்த 42 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

இந்தியாவில் பா.ஜ.க, காங்கிரஸ், பகுஜன் சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன. இதுதவிர சுமார் 3 ஆயிரம் சிறிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக இயங்கி வருகின்றன. இந்த கட்சிகளுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகளை வகுத்து உள்ளன. அவற்றை மீறும் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் அவ்வப்போது ரத்து செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் 9-ந்தேதி நாடு முழுவதும் 334 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 22 கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில் 2-வது கட்டமாக நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறியுள்ள 474 பதிவு செய்யப்பட்ட அதேநேரம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதில் தமிழகத்தில் 42 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 64 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த 2 மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் 808 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Night
Day