தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
சென்னை தியாகராய நகர் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் இன்று முதல் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேட்லி சந்திப்பு தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி துவங்க உள்ளதால் இன்று முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி வரை ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றுப்பாதைகள் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் பனகல் பார்க் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலத்தில் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வாகனங்கள் மேம்பாலத்தின் சர்வீஸ் சாலை வழியாக சென்று பிரகாசம் சாலை, பாஷ்யம் சாலை, தியாகராய சாலை, பர்கிட் சாலை வழியாக தி.நகர் பேருந்து நிலையத்தை அடையலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...