கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி 65 ஆக உயர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பலியானோர் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்து உள்ளது.

கள்ளக்‍குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 18 ஆம் தேதி கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் 229 பேர் உடல் நலம் பாதிக்‍கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்‍கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாபுரத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மரில் கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 65 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது புதுச்சேரி ஜிப்மரில் 7 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், இவர்கள் அனைவரது உடல்நிலை முன்னேறி வருவதாக ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தவிர கள்ளக்‍குறிச்சி அரசு மருத்துவமனையில் 4 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 2 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 9 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை முடிந்து இதுவரை 142 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

Night
Day