தமிழகம்
விவசாயத் தோட்டத்தில் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்த கார்
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக செந்தில் பாலாஜி கடிதம் எழுதியிருந்த நிலையில், அவரது ராஜினாமாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜி, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருப்பினும், இலாகா இல்லாத அமைச்சராக 8 மாதங்கள் நீடித்து வந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக செந்தில்பாலாஜி தமிழக முதல்வருக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் ராஜினாமாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...