9ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தமிழ் ஆசிரியர் கைது..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தமிழ் ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். 


பாதிக்கப்பட்ட மாணவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது குறித்து பெற்றோர் விசாரித்த போது தமிழ் ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் ஆசிரியர் தாக்கியது போன்று வழக்கை பதிவு செய்து அவரை காப்பாற்றும் நடவடிக்கையில் பள்ளி நிர்வாகமும், காவல்துறையும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்நிலையத்தை முற்றுகையிட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து தமிழ் ஆசிரியர் சுதாகரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். 

Night
Day