எழுத்தின் அளவு: அ+ அ- அ
விளம்பர திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதத்தில் மட்டும் 321 போக்சோ வழக்குகளும், 134 பாலியல் குற்றங்களும் அரங்கேறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் பெண்களுக்கு எதிராக 55 போக்சோ குற்றங்களும், 23 பாலியல் குற்றங்களும் என மொத்தம் 78 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி மாதத்தில் 141 போக்சோ குற்றங்களும், 56 பாலியல் குற்றங்களும் என மொத்தம் 197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மார்ச் மாதத்தில் 125 போக்சோ குற்றங்களும், 55 பாலியல் குற்றங்களும் என மொத்தம் 180 குற்றங்கள் அரங்கேறி உள்ளன.
கடந்த 3 மாதத்தில் 321 போக்சோ குற்றங்களும், 134 பாலியல் குற்றங்கள் என மொத்தம் 455 குற்றங்கள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விளம்பர திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.