நாங்குநேரி - பள்ளி வகுப்பறையில் மாணவருக்கு அரிவாள் வெட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

 திருநெல்வேலி அருகே கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர் ஒருவர் சக மாணவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாங்குநேரி அடுத்த விஜயநாராயணம் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஒருவர் நாங்குநேரியை சேர்ந்த சக மாணவர் மீது தண்ணீரை சிந்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நாங்குநேரியை சேர்ந்த மாணவர், வீட்டிலிருந்து பள்ளிக்கு அரிவாளை கொண்டு வந்து, தண்ணீரை சிந்திய மாணவரின் தலையில் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

Night
Day