க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உள்ள கரையடிசுவாமி கோவில் அருகில் கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மெஞ்ஞானபுரம் மாநாடு பகுதியை சேர்ந்தவர் செல்லையா. கூலித் தொழிலாளியான இவர், மனைவி இறந்த பிறகு சாத்தான்குளத்தில் வசித்து வந்தார். இதனிடையே நேற்று நள்ளிரவில் கரையடிசுவாமி கோவில் அருகே உள்ள பிள்ளையார் கோவிலில் படுத்து உறங்கியுள்ளார். இன்று காலை அந்த வழியே சென்ற பொதுமக்கள், கழுத்தில் வெட்டுப்பட்ட நிலையில் ஒருவர் இறந்து கிடப்பதாக சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் செல்லையா உடலை மீட்டனர். தொடர்ந்து, அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...