ஆசிரியர் தாக்கப்பட்ட வழக்கு - திமுக ஆதரவு குண்டர்கள் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மேல்நிலைப்பள்ளியின் பகுதிநேர ஆசிரியரை திமுக ஒன்றிய செயலாளர் ஆதரவு குண்டர்கள் மண்டையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புள்ளமங்கலம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று வழிபாட்டு கூட்டம் நடைபெற்றது. அப்போது  அங்கு மன்னார்குடி ஒன்றிய திமுக செயலாளர் குமரேசன் ஆதரவாளர்கள் வகுப்பறை கட்டிடம் கட்ட டிராக்டரில் மணல் ஏற்றி வந்துள்ளனர். அப்பள்ளியின் பகுதிநேர ஆசிரியர் சிவா வழிபாட்டு கூட்டம் நடைபெற்று கொண்டிருப்பதால் டிராக்டரை பிறகு கொண்டு வர கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமரேசன் ஆதரவாளர்கள் சிவாவை கட்டை மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் புகாரின் பேரில் திமுக நிர்வாகி குமரேசனின் உறவினர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். 

varient
Night
Day