க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். ஏலாக்குறிச்சி சுள்ளங்குடியை சேர்ந்த ராஜா என்பவர், 12ம் வகுப்பு படித்த சிறுமி ஒருவரை காதலிக்க வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சிறுமியை கட்டாயப்படுத்தி தனது இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்ற ராஜா, திருமானூரை அடுத்த அழகியமணவாளனில் உள்ள விநாயகர் கோயிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். பின்னர், திருப்பூருக்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மகளிர் போலீசார், ராஜாவை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...