6 பெண்கள் மட்டுமே பயணித்த 11 நிமிட விண்வெளி பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 6 பெண்கள் கொண்ட குழு 11 நிமிடம் மட்டுமே அங்கு இருந்துவிட்டு பின்னர் பூமி திரும்பினர்.


அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி கேத்தி பெர்ரி, தொழிலதிபர் ஜெப் பெசோஸின் வருங்கால மனைவியான லாரன் சான்செஸ் உள்பட 6 பெண்கள் மட்டுமே இடம் பெற்ற குழு ஒன்று விண்வெளிக்கு புளூ ஆரிஜின் என்ற விண்கலத்தில் விண்வெளிக்கு பயணித்தனர். மேற்கு டெக்சாஸில் இருந்து புறப்பட்டு ஏறக்குறைய 11 நிமிடம் வரை அவர்களுடைய பயணம் நீடித்தது. விண்வெளியின் எல்லை என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கர்மன் கோட்டையை கடந்து விண்கலம் சென்றது. பின்னர் மீண்டும் பூமிக்கு திரும்பியதும், பெர்ரி தன்னுடைய மகளின் பெயரான டெய்சி என்ற பூவை கையில் உயர்த்தி பிடித்து காண்பித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

varient
Night
Day