மத்திய கிழக்குப் பகுதியில் அதிக படைகளை குவித்த அமெரிக்கா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஒரு பெரிய தாக்குதலை நடத்தலாம் என்ற செய்திகளுக்கு மத்தியில், மத்திய கிழக்கு நாடுகள் பகுதிக்கு அமெரிக்கா கூடுதல் படைகளை அனுப்பி வைத்துள்ளது. அமெரிக்கா படைகளின் தலைமையகமான சென்ட்காமின் தலைவர் ஜெனரல் மைக்கேல் எரிக் குரில்லான் நேற்று அவசரமாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் IDF தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவ் ஆகியோரை சந்தித்தார். ஈரான் தாக்குதலுக்கான தயார்நிலை குறித்து அவர்களுடன் விவாதித்ததாக கூறப்படுகிறது.  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு நிதியளிக்கும் 'பயங்கரவாத அமைப்பு' தான் ஈரான் என்றார். அவர்களின் எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்ள கூட்டாளிகளுடன் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Night
Day