கனிம ஒப்பந்தம் : உக்ரைன் - அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கனிம ஒப்பந்தம் குறித்து அமெரிக்காவுடன் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா சமரசம் செய்ய முயற்சித்த போதிலும், உக்ரைனுடனான போர் நிறுத்தம் குறித்த விவாதங்களை ரஷ்யா தொடர்ந்து தாமதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இயற்கை வளங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் ஒரு மூலோபாய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, வாஷிங்டன்னுக்கு உக்ரைன் ஒரு குழுவை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் துணை பிரதமர் யூலியா ஸ்வைரி-டென்கோ வெளியிட்டுள்ள ஒரு பதிவில் இதனை உறுதிபடுத்தியுள்ளார். மேலும், திட்டத் தேர்வு, சட்ட கட்டமைப்புகள் மற்றும் நீண்ட கால முதலீட்டு வழிமுறை ஆகியவற்றில் இருநாடுகளையும் ஒருங்கிணைப்பதை நோக்கமாக கொண்ட பேச்சுவார்த்தையாக இது அமையும் என்று தெரிவித்துள்ளார்.

Night
Day