ஒவ்வொரு பேஜருக்குள்ளும் தலா 3 கிராம் வெடிப்பொருட்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

லெபனானின் பேஜர் வெடிப்பு சம்பவத்தில் ஒவ்வொரு பேஜருக்குள்ளும் தலா 3 கிராம் வெடிப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. 

ஹிஸ்புல்லாவை பழி தீர்ப்பதற்காக அவர்கள் தைவானில் ஆர்டர் செய்திருந்த 5 ஆயிரம் பேஜர்களில் இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு இந்த வெடிபொருட்களை பொருத்தியதாக லெபனான் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் தைவானின் கோல்ட் அப்பல்லோ நிறுவனமோ, இந்த பேஜர்கள் ஐரோப்பாவில் உள்ள ஒரு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றும் இது தங்களது நிறுவனத்தின் பிராண்டை பயன்படுத்த உரிமை பெற்ற நிறுவனம் என்றும் விளக்கமளித்துள்ளது. பேஜர் வெடிப்பு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த இஸ்ரேலுக்கு உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

varient
Night
Day