இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை இன்று கூடுகிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து முடிவெடுக்க இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை இன்று கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரேல் தற்போது காசா, லெபனான் மற்றும் சிரியா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே தங்கள் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என ஈரான் எச்சரித்துள்ள நிலையில் இஸ்ரேல் அமைச்சரவை கூடுகிறது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant, ஈரானுக்கான பதிலடி சக்தி வாய்ந்ததாகவும், துல்லியமாகவும், அனைத்திற்கும் மேலாக, ஆச்சரியமாகவும் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

varient
Night
Day