எழுத்தின் அளவு: அ+ அ- அ
மணிப்பூர் வன்முறையை தடுக்க தவறிய டிஜிபி ராஜினாமா செய்யக் கோரி மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட மாணவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி விரட்டியடித்தனர். இம்பால் மேற்கு பகுதியில் கோட்ரக் கிராமத்தில் ட்ரோன்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு வீடுகள் சேதமடைந்ததுடன் தனிநபர்களின் சொத்துக்களும், வாகனங்களும் சேதமடைந்தன.
பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன், டிரோன் வெடிகுண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், சிறிய ரக ராக்கெட் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடைபெற்றதாக மணிப்பூர் அரசு தெரிவித்தது. இந்நிலையில் மணிப்பூர் வன்முறையை தடுக்க தவறிய டிஜிபி ராஜினாமா செய்யக் கோரி மாணவர் அமைப்பினர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி விரட்டினர்.