மகாராஷ்டிரா: Cheese-க்கு பதில் மலிவான எண்ணெய் - மெக்டொனால்டு அக்கிரமம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மகாராஷ்டிராவில் ச்சீசுக்கு மலிவான எண்ணெயை பயன்படுத்திய புகழ்பெற்ற மெக்டொனால்டு நிறுவனத்தின் உரிமையை அதிகாரிகள் ரத்து செய்தனர். அகமது நகர் பகுதியில் செயல்பட்டு வரும் மெக்டொனால்டு நிறுவனத்தில் மராட்டிய மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது  பர்கர்கள் மற்றும் நக்கெட்களில் சீசுக்கு பதிலாக மலிவான எண்ணெய்யை சேர்த்து உற்பத்தி செய்வதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். சீசை பயன்படுத்தாமல் வாடிக்கையாளர்களை ஏமாற்றியதால், மெக்டொனால்டு நிறுவனத்துக்கு வழங்கிய உரிமத்தை உடனடியாக அதிகாரிகள் ரத்து செய்தனர். மிகவும் புகழ்பெற்ற மெக்டொனால்டு நிறுவனமே தங்களை ஏமாற்றியதை கண்டு வாடிக்கையாளர்களும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.

varient
Night
Day