நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் முதல் முறையாக உரை நிகழ்த்தும் ஜனாதிபதி திரெளபதி முர்மு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக முன்னேறி வருவதாக மத்திய அரசின் பட்ஜெட் உரையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனைகளை பட்டியலிட்ட அவர், நாட்டின் விண்வெளி மற்றும் பாதுகாப்பு நகரமாக தமிழ்நாடு உருவாகி வருவதாக பெருமிதம் தெரிவத்துள்ளார்.

2024- 2025ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதிய நாடாளுமன்ற மைய அரங்கில் முதல் முறையாக உரையாற்றினார்.

கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தியா, உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடாக மாறியுள்ளதாகவும், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து இரண்டு காலாண்டுகளாக 7 புள்ளி 5 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

பலவீனமான நாடாக இருந்த இந்தியா, பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் ஐந்து நாடுகளில் ஒன்றாக மாறுவதை பார்க்க முடிவதாகவும், இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 450 பில்லியன் டாலரிலிருந்து 775 பில்லியன் டாலருக்கு உயர்ந்துள்ளதாகவும் குடியரசு தலைவர் தெரிவித்தார்...

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், காதி மற்றும் கிராமிய தொழில் பொருட்களின் விற்பனை நான்கு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளதாகவும் குடியரசு தலைவர் முர்மு குறிப்பிட்டார்.

உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே இரண்டு மிகப்பெரிய போர்களை உலகம் கண்ட போதிலும், உலகளாவிய நெருக்கடிகள் இருந்த போதிலும், இந்திய அரசு நாட்டில் பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருப்பதாக கூறிய குடியரசு தலைவர் முர்மு, நாட்டின் சாதாரண மனிதனின் சுமையை அதிகரிக்கவிடவில்லை என குறிப்பிட்டார்.

Night
Day