டெல்லி: புனரமைப்பு பணியின்போது கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 தொழிலாளார்கள் உயிரிழந்தனர்.
டெல்லி கபில்நகரில் உள்ள வெல்கம் எனும் 2 மாடி பழைய கட்டிடத்தை புரனமைப்பு பணி நடைபெற்று வந்தது. நேற்று நள்ளிரவு திடீரென கட்டிடம் இடிந்து விழுந்ததில், கட்டிடத்தில் இருந்த 3 தொழிலாளர்களும் படுகாயமடைந்து உயிருக்குப் போராடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 2 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

Night
Day