திமுகவின் பீர் விருந்துக்கு முட்டு..! அரை நிமிட வசனத்திற்கு 6 டேக்..!

எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி நிகழ்ச்சியில் அக்கட்சி நிர்வாகிகளுக்கு மது சப்ளை செய்யப்பட்ட சம்பவம் மக்களை கடும் கொந்தளிப்புக்கு ஆளாக்கிய நிலையில் அச்சம்பவத்து முட்டு கொடுத்து கொடுக்கப்பட்ட விளக்கம் இணையத்தில் காமெடி கண்டெண்டாக மாறியிருக்கிறது. 

திமுகவின் மது ஒழிப்பு கொள்கையை மக்களிடம் பங்கமாக போட்டுக்கொடுத்த பீர் பாட்டில் சப்ளை சம்பத்துக்கு முட்டு கொடுத்து விளக்கம் கொடுக்க வந்த திமுக நிர்வாகியின் உளறல் சேட்டைகள் தான் தற்போது நெட்டிசன்களின் OG TROLL MATERIAL-ஆக மாறியிருக்கிறது.!

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் உள்ள திருக்கோவிலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு பீர் பாட்டிலுடன் கூடிய அசைவ விருந்து அளிக்கப்பட்டதன் காட்சிகள் வெளியாகி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சாப்பாட்டு பந்தியில் அமர்ந்திருந்த நிர்வாகிகளுக்கு இலையில் கூட்டு பொறியல் பரிமாறப்பட்டதோடு பாயசத்துக்கு பதிலாக பீர் பாட்டில் பறிமாறப்பட்டதன் காட்சிகள் வெளியானதால், மேடைக்கு மேடை மது ஒழிப்பு நாடகம் போட்ட திமுக-வை நெட்டிசன்கள் TROLL செய்து சம்பவம் செய்திருந்தனர்.

இந்தநிலையில் தான் விமர்சனத்துக்கு விளக்கமளித்து முட்டு கொடுக்க வந்த திமுக நிர்வாகி தற்போது படுபயங்கர MATERIAL-ஆக மாறியிருக்கிறார். 27-04-2025 அன்று திமுக இளைஞர் அணி சார்பாக நடந்த கூட்டம் மதியம் 3 மணிக்கு தொடங்கி 6 மணிக்கு நிறைவுபெற்றுவிட்டதாகவும், கூட்டம் முடிந்து அனைவரும் வெளியேறியதாகவும் கூறினார். இதற்கு பிறகு தான் அந்த தனியார் மண்டபத்தில் உள்ள உணவு கூடத்தில் சிலர் மதுவுடன் உணவு அருந்தியதாக கூறினார். இதனால் பீர் விருந்துக்கும், திமுக இளைஞர் அணி தோழர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திமுக நிர்வாகி விளக்க உரை கொடுத்துள்ளார். 

ஆனால் யாரோ எழுதிக்கொடுத்து அனுப்பிய அந்த நாலு வரியை பல முறை மனப்பாடம் செய்து வந்த பிறகும், அதை பிரஸ் மீட்டில் கோர்வையாக சொல்ல முடியாமல் திமுக நிர்வாகி திக்கி திணறிய காட்சிகள், அக்கட்சியின் முதல்வருக்கே துண்டு சீட்டு தேவைப்படும் போதும் சாதாரண நிர்வாகி திக்கி திணறுவது எல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்ற அளவுக்கு இருந்தது.

நாலு வரி வசனத்தை பேச முடியாமல் பாதியில் வெக்ஸ் ஆகி தலையில் கை வைத்து வேதனைப்பட்ட திமுக நிர்வாகியை செய்தியாளர்களே ஆசுவாசப்படுத்தி ’தம்பி 5 நிமிஷம் ரிலாக்ஸ் பண்ணிட்டு பேசுங்க’ என பிரேக் கொடுத்ததோடு, பொறுமை காத்து சினிமா ஷீட்டிங் ரேஞ்சுக்கு TAKE மேல் TAKE எடுத்த சம்பவம் பயிற்சி பத்தல என்ற கலாய்புக்கு ஆளாகியுள்ளது. திமுகவின் கண்ணியமிக்க இளைஞர் அணி என்ற வசனத்தை அத்தனை முறை மணப்பாடம் செய்தும் குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுத்ததாலோ எண்ணவோ கண்ணியமிக்க என்ற வார்த்தையை முழுசாக கூற முடியாமல், திக்கி திக்கி திணறி, பின் பாதிபாதியாக பிச்சி பிச்சி கூறினார்.

மதுவுடன் உணவு அருந்தியதாக வரும் வீடியோ என்ற டயலாக்கை சொல்ல முடியாமல், மது என்ற வார்த்தைக்கே 3 டேக் எடுத்த அந்த திமுக நிர்வாகியின் செயல் அக்கட்சியின் முதல்வர் ஸ்டாலினுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு இருந்தது. இறுதியாக மணப்பாடம் செய்து வந்த வசனங்களை திக்கி திணறி, இடையில் TIME எடுத்து யோசிச்சு, அந்த திமுக நிர்வாகி மூச்சைபிடித்துக்கொண்டு சொல்லி முடித்தை பார்க்கும் போது வகுப்பறையில் ஆசிரியரின் கேள்விக்கு பதிலளிக்கிறேன் என்ற பேரில் மாணவர்கள் செய்யும் சேட்டைகளையே நினைவுப்படுத்தியது. 

இப்படி மக்களிடம் பங்கமாக மாட்டிக்கொண்ட சம்பவத்தில் விளக்கம் என்ற பேரில் முட்டு கொடுத்து நடத்தப்பட்ட பிரஸ் மீட், திமுகவை கலாய்க்க நெட்டிசன்களுக்கு புதிய கண்டெண்டாட மாறிப்போனது தான் மிச்சம்..!

Night
Day